ஸ்கார்பரோ தீ விபத்தில் ஒருவர் பலி
7 ஆனி 2025 சனி 06:24 | பார்வைகள் : 3601
ஸ்கார்பரோவில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தீயணைப்புப் படையினர் வீட்டிற்குள் ஒருவரின் உடலை கண்டெடுத்ததாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்து காலை 7.30 மணியளவில், பிரிம்லி சாலை மற்றும் அன்சன் அவென்யூ, ஸெயின்ட் கிளேர் அவென்யூ வெஸ்ட் அருகிலுள்ள பகுதியில் ஏற்பட்டது.
டொராண்டோ தீயணைப்பு சேவையினரின் சம்பவ இடத்திற்கு சென்றபோது தீ பற்றிய முக்கிய அடையாளங்கள் எதுவும் காணப்படவில்லை.
பின்னர், மிகச் சிறிய அளவிலான தீயை கண்டுபிடித்து, அதை விரைவாக அணைத்தனர்.
வீட்டிற்குள் இருந்த ஒருவரை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்து, உடனடியாக மருத்துவ உதவி வழங்க முயற்சித்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் தொடர்பான அடையாளம் மற்றும் மரணத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எதையும் தற்போது வெளியிடவில்லை.
போலீசாரும், தீயணைப்பு அதிகாரிகளும் இணைந்து, இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan