நுய்யி சூர் சென்னில் யூத மதகுரு மீது தாக்குதல்!
6 ஆனி 2025 வெள்ளி 17:14 | பார்வைகள் : 3961
இந்த ஜூன் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஒரு யூத மத குரு அருந்தகம் ஒன்றில் (CAFÉ) அமர்ந்திருந்தபோது, அவர்மீது நாற்காலியால் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலிற்குள்ளான யூத மத குரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் மதியம் நேரத்தில் Neuilly-sur-Seine (Hauts-de-Seine) பகுதியில் நடந்தது என காவற்துறையினரின் முதற்கட்டத் தகவல் தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட யூத மத குரு அருந்தகத்தில் அமர்ந்திருந்தபோது, ஒருவன் அவர்மீது நேருக்கு நேர் நாற்காலி வீசியுள்ளார்.
நகர பிதா அவரது X கணக்கில் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார். இது யூத விரோதத் தாக்குதல் என்றும், இதற்கு கடுமையான பதில், உறுதியான நடவடிக்கை, மற்றும் யூத விரோதத்துக்கு இடம் கொடுக்காத அரசியல் நிலைப்பாடுகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த யூத விரோத தாக்குதல், அதற்கு சில நாட்களுக்கு முன்னர், மே 30 வெள்ளிக்கிழமை Deauville (Calvados) பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. அதில், யூத மத குரு ஒருவர், ரெபுப்ளிக் பகுதியில் மூவரால் தாக்கப்பட்டதாக Lisieux நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இது மதத்தின் அடிப்படையில் தாக்குதல் சம்பவம் என விசாரணை தொடங்கப்பட்டுள்ளது' என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan