பிரித்தானிய மீன் பிடி படகு உரிமையாளருக்கு €30,000 குற்றப்பணம்!!

6 ஆனி 2025 வெள்ளி 16:27 | பார்வைகள் : 2368
சென்ற மாதம் பிரெஞ்சு அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்றின் உரிமையாளருக்கு €30,000 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
மே 22 ஆம் திகதி பிரெஞ்சு கடற்படையினர் பிரெஞ்சு எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த பிரித்தானிய படகு ஒன்றை தடுத்து நிறுத்தி, அதில் இருந்தவர்களை கைது செய்தனர். நான்கு நாட்களின் பின்னர், படகிற்கு மீன் பிடிப்பதற்குரிய அனுமதி பத்திரம் இல்லை என தெரிவிக்கப்பட்டு மீண்டும் பிரித்தானியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பிரெஞ்சு தரப்பில், குறித்த படகு பிரெஞ்சு கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாகவும், மீன் பிடிப்பதற்குரிய ப்ரெஞ்சு - பிரித்தானிய எந்த அனுமதி பத்திரமும் அவர்களிடத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டு €30,000 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்பட்டு, பின்னர் படகு விடுவிக்கப்பட்டது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1