ரான்சில் தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

6 ஆனி 2025 வெள்ளி 15:22 | பார்வைகள் : 7021
ஜூன் 6 ஆம் தேதி வியாழக்கிமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில், ரான்சில் (REIMS) உள்ள ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில், குறைந்தது நால்வரும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டுள்ளனர்.
அருகில் இருந்த மாணவர்கள் 'முதலில் பாரிய வெடிச்சத்தமும் அதனைத் தொடரந்து கூச்சலும் கேட்டோம். கொழுந்து விட்டெறியும் தீயைக் கண்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
தீ அதிகமாக பரவியபோது, 13 வயது சிறுவன் நான்காவது மாடியிலிருந்து குதித்திருக்கிறான். அவதுது கால்கள் முறிந்துள்ளனதுடன் உடலிலும் பெரும் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக விரைந்த காவல்துறையினர் பலரை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
இதனைத் தொடரந்து 60 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 40 காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயுடன் வெகு நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
காவல்துறையின் வேகமான நடவடிக்கையால் இன்னும் பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டது' என நகரபிதா தெரிவித்துள்ளார்.
தீயின் காரணம் பற்றிய ஆய்வுகள் ஆரம்பித்துள்ளன.
தற்போதைய நிலை
4 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் ஒரு குழந்தை அடங்கும்
1 குழந்தையைக் காணவில்லை
2 பெரியவர்கள் கடுமையாக காயம் அடைந்துள்ளனர்
12 பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பிரான்சு, தொண்டைமண்டலம்
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1