Paristamil Navigation Paristamil advert login

35°C வரை அடுத்த வாரம் அதிக வெயில்!

35°C வரை அடுத்த வாரம் அதிக வெயில்!

6 ஆனி 2025 வெள்ளி 14:21 | பார்வைகள் : 5043


ஜூன் மாதத்தின் முதலாம் வாரம் மழையுடனும் மேகமூட்டத்துடனும் சென்ற பிறகு, இரண்டாம் வாரத்தில் வெப்பம் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 10 ஆம் தேதி முதல், தென் மேற்குப் பகுதிகளில் வெப்பநிலை 35°C வரை செல்லும் வாய்ப்பு உள்ளது. மொத்த பிரான்சிலும் சூரிய ஒளி அதிகமாக இருக்கும் என தேசிய வானிலை அவதானிப்பு மையத்தின்கணிப்பு தெரிவிக்கிறது.

ஜூன் 11 ஆம் தேதி, Landes, Gironde, Dordogne பகுதியில் 33°C மேலும், Occitanie யில் Tarn, Gers, Gard போன்ற இடங்களில் 32°C வரையான அளவு வெப்பமும் ஏற்படும்.

ஆனால், ஜூன் 12 ஆம் தேதி முதல், இந்த வெப்பம் திடீரென குறைந்து, மழையும் இடியுடன் கூடிய புயலும் ஏற்படலாம். இது சஹாராவில் இருந்து வரும் வெப்ப காற்றால் ஏற்படுகிறது.

வெப்பத்தை கவனிக்கவும், பாதுகாப்பாக இருங்கள்!

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026