"போரின் போது பரஸ்பர ஆதரவு":பிரான்ஸ் - போலந்து இடையிலான நட்புறவு!

9 வைகாசி 2025 வெள்ளி 13:39 | பார்வைகள் : 658
பிரான்ஸ் மற்றும் போலந்து, இன்று நட்பு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையை கையெழுத்திட்டுள்ளன.
இந்த உடன்படிக்கையின் முக்கிய அம்சமாக, ஒரு நாட்டுக்கு தாக்குதல் ஏற்பட்டால் மற்ற நாடு இராணுவம் உள்பட பரஸ்பர உதவிகளை வழங்கும் முக்கியக் குறிப்பு இடம்பெற்றுள்ளது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) இதனை மிக முக்கியமான பகுதியாகக் கூறியுள்ளார்.
மேலும், பிரான்ஸ் அணு பாதுகாப்பு "parapluie nucléaire" திட்டத்தில் ஒத்துழைக்கும் வாய்ப்பும் இந்த உடன்பாட்டின் மூலம் கையெழுத்து இடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் அண்டை நாடாக உள்ள போலந்து, ஐரோப்பாவில் முக்கிய ராணுவ சக்தியாக வளர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா மீதான நம்பிக்கையிலிருந்து விலகி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவாக்க விரும்புகிறது.
இந்த ஒப்பந்தம், பிரான்ஸ்- போலந்து இடையிலான உறவுகளை ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் உள்ள உறவுகளுக்கு இணையாக உயர்த்தும் நோக்கில் கையெழுத்தாகியுள்ளது.