இரண்டாவது போட்டியிலேயே 5 விக்கெட்! மிரட்டிய 19 வயது இலங்கை வீராங்கனை

9 வைகாசி 2025 வெள்ளி 12:16 | பார்வைகள் : 1319
மகளிர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இலங்கையின் தேவ்மி விஹங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கொழும்பில் மகளிர் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது. லௌரா வால்வார்ட், டஸ்மின் பிரிட்ஸ் கூட்டணி 68 ஓட்டங்கள் குவித்தது.
இந்தக் கூட்டணியை பிரித்த தேவ்மி விஹங்க (Dewmi Vihanga), அடுத்தடுத்து தனது மிரட்டலான பந்துவீச்சினால் விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி நிலைகுலைந்தது. 85 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை அணி இழந்தது.
19 வயதான தேவ்மி விஹங்க தனது இரண்டாவது போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டியுள்ளார்.
இவர் முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1