ஐபிஎல் 2025 தொடர் இடைநிறுத்தம்! போர் பதற்றத்தால் பிசிசிஐ எடுத்த முடிவு

9 வைகாசி 2025 வெள்ளி 12:16 | பார்வைகள் : 122
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மோதல் காரணமாக ஐபிஎல்லில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இராணுவ பதற்றத்தின் விளைவாக பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, பாதியில் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
எனினும், இத்தொடர் எப்போது மீண்டும் திட்டமிடப்படும் என்பது குறித்து பிசிசிஐ அல்லது ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் இருந்து இன்னும் எந்த தெளிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.