ரஷ்ய ஜனாதிபதியைச் சந்திந்த ஸ்லோவாகிய பிரதமர்.. - பிரான்ஸ் கண்டனம்!
9 வைகாசி 2025 வெள்ளி 09:41 | பார்வைகள் : 8578
ரஷ்யாவின் 'சிவப்பு சதுக்கம்' எனப்படும் ஜேர்மனியின் நாசிப்படைக்கு எதிராக வெற்றின் 80 ஆண்டு நிறைவை இன்று மே 9, வெள்ளிக்கிழமை கொண்டாடிக்கொண்டிக்கொண்டுள்ளது. இதில் பங்கேற்க ஸ்லோவாகியாவின் பிரதமர் Robert Fico அங்கு சென்றுள்ளார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பை பிரான்ஸ் தரப்பு கண்டித்துள்ளது. ஐரோப்பாவுக்கான பிரெஞ்சு அமைச்சர் Benjamin Haddad இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். "ஐரோப்பாவின் தலைவர் ஒருவர் மொஸ்கோவில் (ரஷ்ய தலைநகர்) நிற்கவேண்டிய இடம் இல்லை" என அவர் மிகவும் காட்டமாக தெரிவித்தார்.
அத்தோடு, "ரஷ்யா ஐரோப்பாவிற்கும் பிரான்சுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது, நாம் அப்பாவியாக இருக்கக்கூடாது" எனவும் அவர் குறிப்பிட்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan