Paristamil Navigation Paristamil advert login

மக்ரோன்- போலந்து பிரதமர் சந்திப்பு! - முக்கிய கலந்துரையாடல்..!!

மக்ரோன்- போலந்து பிரதமர் சந்திப்பு! - முக்கிய கலந்துரையாடல்..!!

9 வைகாசி 2025 வெள்ளி 08:41 | பார்வைகள் : 455


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் போலந்து பிரதமர் டொனால் டஸ்கினை பிரான்சில் வைத்து சந்திக்கிறார்.

இன்று மே 9, வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு Nancy (Meurthe-et-Moselle) நகரில் பிற்பகல் 12.45 மணிக்கு இடம்பெற உள்ளது. பணவீக்கத்தில் சிக்கியிருந்த போலந்து, மெல்ல மெல்ல அதில் இருந்து வெளியேறி பொருளாதார முன்னேற்றத்தைச் சந்தித்து வருகிறது. இந்த சந்திப்பு பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் இடம்பெற உள்ளதாக எலிசே சுட்டிக்காட்டியுள்ளது.

'பிரெஞ்சு-போலிஷ் நட்பை வலுப்படுத்தவும், ஐரோப்பாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த சந்திப்பு அவசியமாகிறது' என போலந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்