வெள்ளை வான் படுகொலை!!
8 வைகாசி 2025 வியாழன் 20:51 | பார்வைகள் : 11299
நேற்று மாலை, அவின்யொன் (Avignon - Vaucluse) நகரின் தெற்குப் பகுதியான Croix des Oiseaux பகுதியில் படுகொலை ஒன்று நடந்துள்ளது.

காவற்துறையினரின் தகவலின்படி, நேற்று 7ம் திகதி மாலை 21h00 மணியளவில் இந்தப் படுகொலை நிகழந்துள்ளது.
இங்குள்ள «Le Cercle» அருந்தகத்தில், இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன், இந்த உடலம் காணப்பட்டுள்ளது. நெஞ்கிலும், மற்றையது தலையிலுமாக இந்த இரண்டு துப்பாக்கிக் குண்டுகளும் பாய்ந்துள்ளன. இவர் 36 வயதுடையவர்.
ஒரு வெள்ளைநிற, பொருட்கள் ஏற்றும் சிறு பாரஊர்தி ஒன்றில் வந்தே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது என்றும், அந்த வாகனம் சிறிது தூரத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர் மீது, ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகள் உள்ளன எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் இது ஒரு கணக்குத் தீர்த்தல் படுகொலையாக இருக்கலாம் என்ற ரீதியிலேயே, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan