காவல்துறை வீரர் தற்கொலை! - இவ்வருடத்தின் ஒன்பதாவது சம்பவம்!!

8 வைகாசி 2025 வியாழன் 20:22 | பார்வைகள் : 3050
நீஸ் (nice) நகரில் பணிபுரியும் காவல்துறை வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 52 வயதுடைய அவர் இரு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மே 7, புதன்கிழமை Yvan T எனும் காவல்துறை வீரர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தலையில் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.
அவரது தற்கொலை தேசிய காவல்துறையினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிரான்சில் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து பதிவாகும் காவல்துறையினரின் ஒன்பதாவது தற்கொலை இதுவாகும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025