Paristamil Navigation Paristamil advert login

Saint-Cloud சுரங்கத்துக்குள் தீ.. போக்குவரத்து பாதிப்பு!!

Saint-Cloud சுரங்கத்துக்குள் தீ.. போக்குவரத்து பாதிப்பு!!

8 வைகாசி 2025 வியாழன் 19:22 | பார்வைகள் : 370


இன்று மே 8, வியாழக்கிழமை காலை tunnel de Saint-Cloud சுரங்கத்துக்குள் திடீரென தீ பரவியது. அதை அடுத்து A13 நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

பரிசில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் Porte d'Auteuil மற்றும் Vaucresson பகுதிக்கும் இடையே போக்குவரத்து தடைப்பட்டது. தீ பரவியமைக்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றபோதும், விரைவாக தீ அணைக்கப்பட்டது.

காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை போக்குவரத்து தடைப்பட்டது. 30 வரையான தீயணைப்பு வீரர்கள் களத்தில் இருந்ததாகவும், இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்