Paristamil Navigation Paristamil advert login

இந்திய தாக்குதலில் பயங்கரவாதி மசூத் அசார் சகோதரன் பலி

இந்திய தாக்குதலில் பயங்கரவாதி மசூத் அசார் சகோதரன் பலி

8 வைகாசி 2025 வியாழன் 20:30 | பார்வைகள் : 638


இந்தியா நடத்திய தாக்குதலில், பயங்கரவாதி மசூத் அசாரின் இளைய சகோதரன் கொல்லப்பட்டான்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில்,100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பஹவல்பூரில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாமும் அடங்கும். இந்த தாக்குதலில் தனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் தெரிவித்து இருந்தான்.

இந்நிலையில், இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் மசூத் அசாரின் இளைய சகோதரன் அப்துல் ராப் அசார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

யார் இவன்அப்துல் ராப் அசார், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி.

கடந்த 1999ம் ஆண்டு காஷ்மீர் சிறையில் இருந்த மசூத் அசாரை விடுவிக்க வைப்பதற்காக நேபாளத்தில் இருந்து காந்தகாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் ஐசி 814 விமானத்தை கடத்தி சென்றதில் மூளையாக செயல்பட்டவன்.

2001 ம் ஆண்டு பார்லிமென்ட் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பதன்கோட் தாக்குதல் சம்பவத்தில் இவனுக்கு தொடர்பு உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்