குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

8 வைகாசி 2025 வியாழன் 16:52 | பார்வைகள் : 2958
குழந்தைகளின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பதோடு அவர்களது உணர்வுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்.சிரித்தால் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க வேண்டும். அழுதால் ஏன் அழுகிறாய்? என்று காரணம் கேட்க வேண்டும். மாறாக குழந்தைகளைத் திட்டுவதோ, அடிப்பதோ கூடாது.
குழந்தைகளிடம் அன்பு காட்டுவதால் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்க முடியும். அதைத் தவிர்த்து அவர்களை உதாசீனப்படுத்தினாலோ, மனதைக் காயப்படுத்தினாலோ அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகக் காரணம் ஆகிவிடும்.
குழந்தைகளைப் பகட்டாகவோ, ஆடம்பரமாகவோ வாழவிடாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.
நாம் குழந்தையாக இருந்தபோது நமக்குக் கிடைக்காத சந்தோஷம் நமது குழந்தைகளுக்குக் கிடைக்கும் போது அதை நாம் பகிர்ந்து கொண்டு ஆனந்தப்பட வேண்டும்.
குழந்தைகள் தங்களைப் பாராட்டுவதைத்தான் பெரிதும் விரும்புவார்கள். அடுத்தவர் முன் தலைகுனிவதை குழந்தைகள் விரும்புவதில்லை. அதே நேரம் அவர்களிடம் பிழைகள், தவறுகள் இருந்தால் அன்பாக எடுத்துக் கூறி அவற்றைத் திருத்த பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.
குழந்தைகளுக்குத் தோல்விகளையும் சந்திக்கப் பழக்க வேண்டும். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதோ, சொல்வதையெல்லாம் செய்து கொடுப்பதோ மிகவும் தவறானது. அத்தகைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் சின்னச் சின்ன தோல்விகளையும், தாங்க முடியாமல் முடங்கிப் போவார்கள்.
மற்ற குழந்தைகள் போல் நமது குழந்தைகளும் படிப்பில் முன்னேறவில்லை என்று அடிப்பதாலோ, திட்டுவதாலோ, பயன் கிடைத்துவிடாது. அதனால் குழந்தைகளுக்கு மன உளைச்சல், பயம், விரக்தி, எரிச்சல்தான் வரும் என்பதைப் புரிந்து கொண்டு பெற்றோர்கள் சாதுரியமாக நடந்து கொள்ளவேண்டும்.உங்கள் குழந்தையை அதன் போக்கில் வளரவிடுவது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று அவர்களைக் கட்டுப்படுத்த கூடாது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3