Paristamil Navigation Paristamil advert login

புலம்பெயர்தலுக்கு எதிரான ஜேர்மனியின் திட்டம்

புலம்பெயர்தலுக்கு எதிரான ஜேர்மனியின் திட்டம்

8 வைகாசி 2025 வியாழன் 13:14 | பார்வைகள் : 520


ஜேர்மனியில் புதிய அரசு பொறுப்பேற்றதுமே, அதன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸ், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது குறித்துதான் பேசியுள்ளார்.

குறிப்பாக, எல்லைக் கடுப்பாடுகளைக் கடுமையாக்க, எல்லையில் அதிக பொலிசாரை நியமிப்பது, மற்றும், புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லையிலேயே திருப்பி அனுப்புவது முதலான திட்டங்கள் குறித்து பேசியுள்ளார் மெர்ஸ்.

ஆனால், மெர்ஸின் கருத்துக்கு மாறுபடுவதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது சட்டவிரோதம் என்றும், சுவிட்சர்லாந்து அதை ஏற்றுக்கொள்ளாது என்றும் புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனி, தங்களுடன் இணைந்து செயல்படுவதையும், அகதிகள் தொடர்பிலான டப்ளின் ஒப்பந்தம் மற்றும் சட்டங்களுக்கு உடன்பட்டு நடப்பதையும் எதிர்பார்ப்பதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.

மேலும், எல்லை வழியாக மக்களும் பொருட்களும் வழக்கமாக சென்று வருவது தொடரவேண்டும் என்றும் சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்