Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி - நீதிகோரி மக்கள் ஆர்ப்பாட்டம் !

கொழும்பில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி - நீதிகோரி மக்கள் ஆர்ப்பாட்டம் !

8 வைகாசி 2025 வியாழன் 10:22 | பார்வைகள் : 196


கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

கொட்டாஞ்சேனை விவேகாந்தர் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, ஹின்னி அப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்னாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன், கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் அமைந்துள்ள மாணவியின் வீட்டுக்கு முன்னால் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு மாணவியின் பெற்றோருக்கு ஆறுதலை தெரிவித்ததுடன், மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டனையின் முன்நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்து தங்களது ஆதரவு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் உயிரிழந்த மாணவிக்காக ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

இதேவேளை, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள மாணவி ஆரம்பத்தில் கல்வி பயின்ற பாடசாலைக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்