Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானை பழி தீர்க்க துல்லிய ஆயுதங்களை தெரிவு செய்த இந்தியா

பாகிஸ்தானை பழி தீர்க்க துல்லிய ஆயுதங்களை தெரிவு செய்த இந்தியா

8 வைகாசி 2025 வியாழன் 10:22 | பார்வைகள் : 229


பஹல்காம் விவகாரத்தில் பாகிஸ்தானை தண்டிக்கும் பொருட்டு முன்னெடுத்த சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா தெரிவு செய்துள்ள ஆயுதங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் புதன்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின.

இதில் Scalp மற்றும் HAMMER ஏவுகணைகளை இந்திய விமானப்படை பயன்படுத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சிந்தூர் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதை நள்ளிரவு 1.44 மணிக்கு இந்திய ராணுவம் அறிக்கை ஒன்றில் உறுதி செய்திருந்தது.

சிந்தூர் நடவடிக்கையை செயல்படுத்த இந்திய விமானப்படை ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்தியுள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் உக்கிரமான தாக்குதல் பணிகளுக்காக SCALP ஏவுகணைகளை ஏவியது.

அத்துடன் இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்காக HAMMER ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளனர். Scalp அல்லது Storm Shadow ஏவுகணை என்பது ஒரு நீண்ட தூர வான்வழி ஏவுகணை ஆகும்.

இது வழக்கமான ஆயுதம் ஏந்தியதாகவும், நிலையான இலக்குகளுக்கு எதிரான உக்கிரமான தாக்குதல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய நிறுவனமான MBDA இந்த SCALP ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. 1300 கிலோ எடை கொண்ட SCALP ஏவுகணையானது கடினப்படுத்தப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு போன்ற இலக்குகளை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையானது பொதுவாக யூரோஃபைட்டர் டைபூன் மற்றும் பிரான்சின் ரஃபேல் போன்ற போர் விமானங்களிலிருந்து மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எதிரியின் இலக்குகளை அழிக்க ரடார்களில் சிக்காமல் பயணிக்கக் கூடியது SCALP ஏவுகணை.

இந்தியா மட்டுமின்றி, இந்த ஏவுகணை ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி தற்போது உக்ரைனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

HAMMER ஏவுகணைகளை பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான சஃப்ரான் எலக்ட்ரானிக்ஸ் & டிஃபென்ஸ் வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணையானது சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அதிக துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.

இந்த இரு ஏவுகணைகளுடன் காமிகேஸ் ட்ரோன்களையும் இந்தியா பயன்படுத்தியுள்ளது. கண்காணிப்பு, இலக்குகளை அடையாளம் காணுதல் மற்றும் இறுதித் தாக்குதல்களை நடத்துவதற்கு காமிகேஸ் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்