Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானுடன் இந்தியா மோதல்- 27 விமான நிலையங்கள் மூடல்!

பாகிஸ்தானுடன்  இந்தியா மோதல்- 27 விமான நிலையங்கள் மூடல்!

8 வைகாசி 2025 வியாழன் 09:22 | பார்வைகள் : 1739


பாகிஸ்தான் - இந்தியா முறுகலை அடுத்து , இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள 25 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

விமான நிலையங்கள் மூடப்பட்டதால், அங்கு செல்ல வேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய 300 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் மற்றும் சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் விமான ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 400 இற்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி மே 10 ஆம் திகதி காலை 5.29 மணிவரை விமான நிலையங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 430 விமானங்களை இந்திய விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் 147 விமானங்களை ரத்து செய்துள்ளன.

ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர், அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா, பதிண்டா, ஹல்வாரா, பதான்கோட், பூந்தர், சிம்லா, கக்கல், தரம்சாலா, கிஷன்கர், ஜெய்சல்மேர், ஜோத்பூர், பிகானேர், முந்த்ரா, ஜாம்நகர், ராஜ்கோட், போர்பந்தர், காண்ட்லா, கேஷோத், புஜ், குவாலியர், ஹிண்டன் ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்