பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் செயற்கைக்கோள் படங்கள் இதோ!

8 வைகாசி 2025 வியாழன் 07:59 | பார்வைகள் : 228
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இது தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தி உள்ளது. நேற்று அதிகாலை 1:05 முதல் 1:30மணி வரை, 25 நிமிடங்களில் யாரும் எதிர்பாராத தாக்குதலை இந்தியா நடத்தியது.
ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக, பயங்கரவாதிகளின் முகாம்களை நிர்மூலமாக்கிய இந்திய ராணுவத்திற்கு பாராட்டு குவிகிறது. பாகிஸ்தானில் இந்திய ஏவுகணைத் தாக்குதல்களின் பாதிப்பை செயற்கைக்கோள் படங்கள் எடுத்துரைக்கிறது.
பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் துல்லியமான தாக்குதல்களை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, பலத்த சேதத்தை புதிய செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
பஹாவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி பலத்த சேதம் அடைந்துள்ளது. முரிட்கே நகரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடங்கள் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை செயற்கைக்கோள் படம் எடுத்துரைக்கிறது.