Paristamil Navigation Paristamil advert login

விசேட செய்தி : பரிசில் கூட்டத்துக்குள் பாய்ந்த மகிழுந்து.. தீ வைப்பு.. பலத்த வன்முறை!!

விசேட செய்தி : பரிசில் கூட்டத்துக்குள் பாய்ந்த மகிழுந்து.. தீ வைப்பு.. பலத்த வன்முறை!!

8 வைகாசி 2025 வியாழன் 03:06 | பார்வைகள் : 3251


சற்று முன்னர் சோம்ப்ஸ்-எலிசே பகுதியில் பலத்த வன்முறை வெடித்தது. மகிழுந்து ஒன்று கூட்டத்துக்குள் பாய்ந்துள்ளது. இதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

8 ஆம் வட்டாரத்தின் Rue Christophe-Colomb வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றது. புதன்கிழமை இரவு இடம்பெற்ற PSG எதிர் Arsenal அணிகளுக்கிடையிலான போட்டியில் 2-1 எனும் கோல் கணக்கில் PSG அணி வென்றது. அதை அடுத்து பெருமளவான ரசிகர்கள் ஆரவாரத்துடன் வெற்றியை கொண்டாடிக்கொண்டு வீடு திரும்பிய போது மேற்படி சம்பவம் இடம்பெற்றது.

PSG ரசிகர்கள் மூவரை மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியுள்ளது. இதில் மூவரும் காயமடைந்துள்ளனர். அதை அடுத்து குறித்த மகிழுந்து ரசிகர்களால் எரியூட்டப்பட்டது.

மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.  சில கடைகளும், மேலும் சில வாகனங்களும் எரியூட்டப்பட்டதாக அறிய முடிகிறது. நள்ளிரவு 1.30 மணி நிலவரப்படி 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்