Paristamil Navigation Paristamil advert login

சிரிய அதிபரைப் போற்றும் மக்ரோன் - எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்!!

சிரிய அதிபரைப் போற்றும் மக்ரோன் - எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்!!

7 வைகாசி 2025 புதன் 23:19 | பார்வைகள் : 10205


«நாங்கள் எதிர்த்துப் போராடிய அரசிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் அஹ்மத் அல்-சாரா ((Ahmed al-Charaa). அதன் பொறுப்பு எங்களிற்கு நன்றாகவே விளங்கும். இவற்றை அழித்து நல்லாட்சியை வழங்க புதிய சிரிய அதிபர் அஹ்மத் அல்-சாரா தயாராக உள்ளார்»
என எமானுவல் மக்ரோன் சிரியாவின் அதிபர் அஹ்மத் அல்-சாரா இனைப் புகழந்த பேசி உள்ளார்.

«நாம் கடந்த கால வாழ்க்கையை அறிவோம். இதனையெல்லாம் மாற்றி நல்லாட்சி வழங்குவார். நாம் அதன் ஆரம்பத்தைப் பார்த்துள்ளளோம். இவர் மிகவும் தெளிவானவர்»

எனவும் எமானுவல் மக்ரோன்தெரிவித்துள்ளார்.

images%20(1).jpg

இவரை பிரான்சிற்கு அழைத்ததையும், எலிசே மாளிகையில் வரவேற்றதையும், மரின் லூப்பன் முதல் பல கட்சிகள் மிக மோசமாகக் கண்டித்துள்ளன.

இவர் ஒரு ISIS இன் ஜிகாதியாவர், இவரை மக்ரோன் வரவேற்றுள்ளமை மிகவும் தேமாசமான செயல் எனவும், இது வெறும் அரசியல் தேர்தல் நாடகம் எனவும், மக்ரோனின் நடவடிக்கையை இவர்கள் விமர்சித்துள்ளனர்.

abou-mohammed-al-joulani-il-y-a-quelques-annees.webp

இந்த அஹ்மத் அல்-சாரா ஒரு ஜகாதித் தளபதி ஆவார். இவரிற்கு பேராட்டப் பெயரான Abou Mohammed al-Joulani என்பதும் உள்ளமை  குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்