புவி வெப்பமடைதலுக்கு பணக்காரர்களே முதன்மை காரணம்!

7 வைகாசி 2025 புதன் 23:21 | பார்வைகள் : 3737
உலகின் 10% மிகப்பணக்காரர்கள் 1990 முதல் இன்று வரை உலகளாவிய வெப்பமயமாதலுக்கு 66% அளவுக்கு காரணமாக உள்ளனர் என்று Nature Climate Change இதழில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள பணக்காரர்கள் அதிக அளவில் கார்பன் வாயு வெளியீட்டை ஏற்படுத்துகின்றனர். இவர்களின் வாழ்க்கைமுறை மற்றும் அதிக மாசுபாடு விளைவிக்கும் துறைகளில் அவர்கள் செய்யும் முதலீடுகள் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
உலகின் 1% செல்வந்தர்கள், சாதாரண மக்களை விட 26 மடங்கிலும் அதிகமாக புவியின் வெப்ப அலைகளுக்கும், 17 மடங்கிலும் அதிகமாக அமேசான் வறட்சிக்கும் காரணமாக உள்ளனர்.
இந்த சூழ்நிலை மாற்றத்துக்கு பணக்காரர்கள் பெரிதும் பொறுப்பு வகிக்கின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டு, செல்வவரி, அதிக மாசுக்களை வெளியிடும் முதலீடுகள் மீது கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1