ரீயூனியன் தீவை ஆட்டிப்படைக்கும் சிக்கன்குனியா.. 12 பேர் பலி!!

7 வைகாசி 2025 புதன் 21:37 | பார்வைகள் : 433
பிரான்சுக்கு சொந்தமான Réunion தீவில் சிக்கன்குனியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வாரத்தில் அங்கு மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
சென்ற ஏப்ரலில் இருந்து இதுவரை அங்கு 4,900 பேர் சிக்கன்குனியாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,000 பேர் இவ்வருட ஆரம்பம் முதல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். போதிய மருத்துவ வசதிகள் இன்றியும், இடவசதி இன்றியும் மருத்துவத்துறை தள்ளாடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தடுப்பூசி போடும் பணி இடம்பெற்று வருகிறது.
ரீயூனியன் தீவில் 900,000 பேர் வசிக்கிறமை குறிப்பிடத்தக்கது.