பரிஸ் : Porte de Pantin அருகே தாக்குதல்.. இளைஞன் பலி!!
7 வைகாசி 2025 புதன் 19:37 | பார்வைகள் : 11252
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Porte de Pantin பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார்.
நேற்று மே 6, செவ்வாய்க்கிழமை இரவு இத்தாக்குதல் இடம்பெற்றது. 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்தியால் கழுத்துப்பகுதியில் வெட்டப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். மருத்துவ உதவிக்குழுவினர் துரிதமாக செயற்பட்டபோதும் இளைஞனைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், பாதசாரி ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து தாக்குதலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குரிய நோக்கம் குறித்த தெரிவிக்கப்படவில்லை.
ஒரு தடவை மட்டுமே வெட்டப்பட்டதாகவும், ஆனால் அது மிகவும் ஆழமாக வெட்டுக்காயம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நள்ளிரவு 12.30 மணி அளவில் தாக்குதலாளி கைது செய்யப்பட்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan