சமந்தா தயாரிப்பாளராக உருவெடுத்தது ஏன்? :

7 வைகாசி 2025 புதன் 19:12 | பார்வைகள் : 200
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரவலாக நடித்து வரும் சமந்தா, தற்போது தெலுங்கில் சுபம் என்ற ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் மே 9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து சமந்தா கூறுகையில், ‛‛இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் தொலைக்காட்சி தொடர்களால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை கருத்தில் கொண்டு சுபம் படத்தை திகில் மற்றும் நகைச்சுவை கலந்த கதையில் உருவாக்கி உள்ளோம். இந்த படத்தை ஒரு சமூக நையாண்டி என்று கூட சொல்லலாம்.
நான் ஒரு புத்திசாலியான தயாரிப்பாளராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த கதையின் மீது எனக்கு ஏற்பட்ட நம்பிக்கையால் இதை தயாரித்திருக்கிறேன். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்றும் நம்புகிறேன். தயாரிப்பு சம்பந்தமாக யாரிடத்திலும் உதவி கேட்க விரும்பாமல் நானே அனைத்து செலவுகளையும் கவனித்துக் கொண்டேன். இந்த படத்திற்கு பிறகு ஜூன் மாதம் முதல் மா இண்டி பங்காரம் என்ற படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தையும் தயாரித்து நடிக்கப் போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.