எரிபொருள் லிட்டருக்கு 50 சதமா?

7 வைகாசி 2025 புதன் 15:49 | பார்வைகள் : 3529
உலக சந்தையில் எரிபொருள் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், OPEP+ அமைப்புகள் மேலதிக உற்பத்தியை அறிவித்து Brent எண்ணெய் விலையை 60.2 டாலராக குறைந்துள்ளன.
இருப்பினும், பிரான்சில் எரிபொருள் விலை சிறிதளவு மட்டுமே குறைந்துள்ளது, ஏனெனில் பம்பில் விலையின் 60% வரை வரிகள் அடங்குகின்றன. இதனால், சந்தையில் விலை குறைந்தாலும், பொதுமக்களுக்கு பெரிதான நன்மை ஏற்படவில்லை.
முன்னணி நிபுணர்கள் Brent எண்ணெய் விலை 50 டாலருக்கு கீழ் போவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது, ஏனெனில் OPEP+ நஷ்டத்தில் விற்க இயலாது.
பம்பில் எரிபொருள் விலை மேலும் சில சதங்கள் குறையக்கூடும், ஆனால் லிட்டருக்கு 50 சதம் போன்ற கனவு விலை என்றுமே சாத்தியமல்ல. கோடை காலம் இலாபகரமானதாக இருக்கும், ஆனால் அதிசயமாக இருக்கப்போவதில்லை என்கின்றனர்.