Paristamil Navigation Paristamil advert login

அடுத்தக்கட்ட நடவடிக்கை; எல்லையோர மாநில முதல்வர்களுடன் அமித்ஷா ஆலோசனை

அடுத்தக்கட்ட நடவடிக்கை; எல்லையோர மாநில முதல்வர்களுடன் அமித்ஷா ஆலோசனை

7 வைகாசி 2025 புதன் 18:27 | பார்வைகள் : 245


எல்லையோர மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்த சூழலில், எல்லையோர மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உட்பட எல்லையோர 10 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். டிஜிபிக்கள், தலைமைச் செயலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் குறித்து, ''நமது ஆயுதப் படைகளைப் பற்றி பெருமைப்படுகிறோம்.

பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு, இந்தியா பதிலடி கொடுத்துள்ளது'' என அமித்ஷா பதிவிட்டுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்