பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய ஆலோசனை
7 வைகாசி 2025 புதன் 11:14 | பார்வைகள் : 8333
டில்லியில் பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் நாளை (மே 07) போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், டில்லியில் பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். அப்போது போர் ஒத்திகை குறித்து முக்கிய ஆலோசனை நடந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் மோடியை அஜித் தோவல் இரண்டாவது முறையாக சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan