Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் போர்க்கால ஒத்திகை: 4 இடங்களை தேர்வு செய்த மத்திய அரசு

தமிழகத்தில்  போர்க்கால ஒத்திகை: 4 இடங்களை தேர்வு செய்த மத்திய அரசு

7 வைகாசி 2025 புதன் 07:08 | பார்வைகள் : 100


தமிழகத்தில் 4 இடங்களில்  போர்க்கால ஒத்திகை நடக்கிறது.

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.இருநாடுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில், நாடு தழுவிய போர்க்கால ஒத்திகையை நாளை(மே 7) நடத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இந் நிலையில், தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது, பதற்றமான சூழலில் மக்களை எப்படி வெளியேற்றுவது, தாக்குதலில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்தப்படும்.

54 ஆண்டுகள் கழித்து(இதற்கு முன்னர் 1971ல் நடந்தது) இந்தியாவில் நாளை (மே 7) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்