Paristamil Navigation Paristamil advert login

அநுர அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள தமிழ் கட்சிகள்

அநுர அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள தமிழ் கட்சிகள்

6 வைகாசி 2025 செவ்வாய் 18:49 | பார்வைகள் : 216



2025ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றது.

இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, வடக்கு, கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் ஆளும் அரசாங்கம் முன்னிலை வகிக்கிறது.

ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பல தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் அறுதிப்பெரும்பான்மை பாலத்தை பெற முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அமோக வெற்றியை பதிவு செய்திருந்த தேசிய மக்கள் சக்தி, இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பின்னடைவு கண்டதாகவே அரசியல் விமர்சர்கள் தெரிவிக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியை அண்மித்த தொகுதிகளை எதிர்க்கட்சிகளும் கைப்பற்றி வருவதால், அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. பல சபைகளில் கூட்டணி அமைக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அது தமிழ் கட்சிகளால் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்