கிளிநொச்சியில் முச்சக்கர வண்டியில் வாக்காளர்களை ஏற்றி இறக்கியவர் கைது

6 வைகாசி 2025 செவ்வாய் 11:19 | பார்வைகள் : 151
கிளிநொச்சியில் தனது முச்சக்கர வண்டியில் வாக்காளர்களை, செவ்வாய்க்கிழமை (06) ஏற்றி, இறக்கிய தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்காளர்கள் பலரை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றி இறக்கி கொண்டிருந்த போது, உங்கள் வாக்குகளை தனது கட்சிக்கு அளிக்குமாறு வலியுறுத்தியதாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸாருடன் சென்ற தேர்தல் திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சந்தேகநபர், தமிழரசு கட்சியின் உறுப்பினர் என அறியமுடிகிறது. கைது செய்த பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.