SNCF பணிப்புறக்கணிப்பிலும் வார இறுதியில் சேவைகள் உறுதி!

7 வைகாசி 2025 புதன் 11:30 | பார்வைகள் : 2314
SNCF பணியாளர்களும் கட்டுப்பாட்டாளர்களும் நடாத்திவரும் வேலைநிறுததம் எந்தவகையிலும் 8ம திகதியின் வார இறுதிப் போக்குவரத்துக்களைப் பாதிக்காது என SNCF இன் தலைமை இயக்குநர் ஜோன்-பியேர் பரன்டு (Jean-Pierre Farandou) வானொலிச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.
«என்னால் 90 சதவீதமான தொடருந்துப் போக்குவரத்துக்களை உறுதி செய்யமுடியும். முறையற்ற வேலை நிறுத்தங்கள் தொடருந்துச் சேவைகளைப் பாதிக்கப் போவதில்லை»
«நான் பயணிகள் பற்றி மட்டுமே நினைக்கின்றேன். பாவம் அவர்களை, இந்த வேலைநிறுத்தம் என்ற சொல் மிகவும் இடையூறு செய்துவிட்டது»
«எந்தப் பயணியையும் தொடருந்துக்காகக் காத்துக் கிடக்க வைக்கப்போவதில்லை. அனைவரிற்குமான தொடருந்துகள் நிச்சயமாக ஒழுங்கு செய்யப்படும். பயணிகள் கவலை கொள்ளத் தேவையில்லை»
என SNCF தலைமை இயக்குனர் உறுதி அறித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025