எதிர்வரும் 8 மே நீண்ட வார இறுதி எப்டி இருக்கும்?

6 வைகாசி 2025 செவ்வாய் 11:37 | பார்வைகள் : 461
மே 1ம் திகிதி இருந்தது போல் அல்லாமல் அனைவரிற்கும் இந்த 8 மே நீண்ட வார இறுதியில் காலநிலை சாதகமாக இருக்கப் போவதில்லை.
பிரான்சின் தெற்குப் பகுதிகள் மழைக்குள் சிக்க உள்ளது. 8ம் திகதி தவிர வார இறுதி முழுவதும் மழை பெய்ய உள்ளது.
Gap, Tarbes, Bourg-Saint-Maurice, Corse ஆகிய பகுதிகளிற்கு வானிலை அவதானிப்பு மையம் பெரும் மழையை எதிர்வு கூறியுள்ளது.
மார்செய் மற்றும் மொன்பெலியோவில் வெப்பநிலை 20° ஆக இருக்கும்.
பிரான்சின் வடக்குப் பகுதி, பெரும்பாலும் மழையற்று நல்ல காலநிலை நிலவும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.