Paristamil Navigation Paristamil advert login

ரூ.1 கோடி கேட்டு SRH வீரருக்கு கொலை மிரட்டல்

ரூ.1 கோடி கேட்டு SRH வீரருக்கு கொலை மிரட்டல்

6 வைகாசி 2025 செவ்வாய் 11:12 | பார்வைகள் : 4979


SRH வீரர் முகமது ஷமிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

9 போட்டிகளில் விளையாடிய ஷமி, 6விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

11 போட்டிகளில் விளையாடியுள்ள SRH அணி, 3 வெற்றி 7 தோல்விகளுடன் பிளேஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து புல்லிபட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரூ. 1 கோடி கொடுக்காவிட்டால் உங்களை கொன்றுவிடுவதாக முகமது ஷமிக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.

இது தொடர்பாக முகமது ஷமியின் சகோதரர் ஹசீப் அகமது, அம்ரோஹா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த பிரபாகர் என்ற பெயரில் மின்னஞ்சல் வந்துள்ளதாகவும், அவரை தனக்கு யாரென்றே தெரியாது எனவும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்தது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்