பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடிப்பதற்கு எதிராக சுவிட்சர்லாந்தில் சட்டம்

6 வைகாசி 2025 செவ்வாய் 09:09 | பார்வைகள் : 202
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடிப்பதற்கு எதிராக சுவிஸ் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பிள்ளைகளை பெற்றோர் அடிப்பதற்கு எதிராக சட்டம் கொண்டு வருவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட மசோதா மீதான வாக்கெடுப்பில், 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மசோதாவுக்கு ஆதரவாகவும், 56 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
பெற்றோர் பிள்ளைகளிடம் வன்முறை காட்டக்கூடாது என்று கூறும் அந்த மசோதாவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள நிலையில், அந்த சட்டத்திருத்தம் செனேட் முன் கொண்டு செல்லப்பட உள்ளது.
சுவிஸ் மக்கள் கட்சி மட்டும், இந்த நடவடிக்கை அவசியமற்றது என்று கூறி அந்த மசோதாவுக்கு ஆதரவளிக்கவில்லை.