Paristamil Navigation Paristamil advert login

சிரிய ஜனாதிபதியை வரவேற்கும் இம்மானுவல் மக்ரோன்!!

சிரிய ஜனாதிபதியை வரவேற்கும் இம்மானுவல் மக்ரோன்!!

6 வைகாசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 5553


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் - சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி Ahmed Al-Charaa இனை நாளை மே 7, புதன்கிழமை சந்திக்கிறார்.

எலிசே மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. சிரியாவின் இடைக்கால ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள Ahmed Al-Charaa இனை, ஜனாதிபதி மக்ரோன் கடந்த பெப்ரவரி மாதத்தில் பிரான்சுக்கு அழைத்திருந்தார். இரு நாடுகளுக்கிடையே நிலவும் இராஜதந்திர முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த சந்திப்புக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மே மாதத்திலேயே சந்திப்பு இடம்பெற உள்ளது.

"சிரிய சமூகத்தின் அனைத்து கூறுகளையும் மதிக்கும் ஒரு சுதந்திரமான, நிலையான, இறையாண்மை கொண்ட ஒரு புதிய சிரியாவை நிர்மாணிப்பதற்கான பிரான்சின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தும்." நோக்கில் அவரது வருகை அமைந்துள்ளதாக எலிசே சுட்டிக்காட்டியுள்ளது. 

Ahmed Al-Charaa கடந்த டிசம்பரில் பதவிக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்