Paristamil Navigation Paristamil advert login

போர் மூண்டாலும் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்; மூடிஸ் நிறுவனம் கணிப்பு

போர் மூண்டாலும் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்; மூடிஸ் நிறுவனம் கணிப்பு

6 வைகாசி 2025 செவ்வாய் 05:55 | பார்வைகள் : 154


பாகிஸ்தானுடன் போர் மூண்டாலும் இந்தியாவுக்கு சேதம் இல்லை, பாதுகாப்பாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மூடிஸ். இது கடன் தர நிர்ணய நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள், ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமை, பொருளாதார நிலைமைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து கணிப்புகளையும், மதிப்பீடுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

மதிப்பீட்டின் போது, மூடிஸ் நிறுவனமானது பணப்புழக்கம், நிதி விகிதங்கள், புவிசார் அரசியல் காரணிகள் என பல அம்சங்களை மையப்புள்ளியாக கொண்டு பகுப்பாய்வு செய்கிறது.அதன் அடிப்படையில், இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றச்சூழல் குறித்தும், போர் மூண்டாலும் இருநாடுகளின் பொருளாதார சூழல் எப்படி இருக்கும் என்றும் கணித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறி உள்ளதாவது;

கடந்தாண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், பாக்.கிற்கு செய்யப்பட்ட ஏற்றுமதியின் பங்கு 0.5 சதவீதத்துக்கும் குறைவாகும். பாகிஸ்தானுடன் பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடவில்லை.

ஆகையால், போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது. இந்தியா மிக பாதுகாப்பாக இருக்கும். அதேநேரத்தில் பாதுகாப்புத்துறைக்கு அதிக செலவு செய்ய நேரிட்டால் இந்தியாவின் நிதி நிலையில் சற்றேதான் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால், போர் பாகிஸ்தானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் பின்னடைவை எதிர்கொள்ளும். அந்திய செலாவணி கையிருப்பையும் பாதிக்கும். இவ்வாறு மூடிஸ் நிறுவனம் கூறி உள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்