Paristamil Navigation Paristamil advert login

கணவர் வெளிநாட்டில் - யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

கணவர் வெளிநாட்டில் - யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

5 வைகாசி 2025 திங்கள் 11:41 | பார்வைகள் : 200


 யாழ். பருத்தித்துறை, மூர்க்கம் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று மாலை கரையொதுங்கியது.

தும்பளை கிழக்கு, சக்தி கோயிலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான தர்சன் சத்தியா  என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தப் பெண்ணின் கணவன் வெளிநாட்டில் உள்ளார்.  மேற்படி பெண்ணும் மகனும் தும்பளையில் வசித்து வந்துள்ளனர்.

கடற்கரையில் சடலம் காணப்படுகின்றது என்று பருத்தித்துறை பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்துப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்