மத்திய கிழக்கிற்காக சேவைகளை நிறுத்தியது - எயார் பிரான்ஸ்!!

4 வைகாசி 2025 ஞாயிறு 21:57 | பார்வைகள் : 418
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையை அடுத்து, பரிசில் இருந்து Tel Aviv நகருக்கு பயணிக்கும் எயார் பிரான்ஸ் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை சில சேவைகள் இடைப்பட்டுள்ளன. நாளை மே 5, திங்கட்கிழமை முதல் மத்திய கிழக்கிற்கான சேவைகள் தடைப்பட்டுள்ளன. அங்கு ஹூதிஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் வரையும் காயமடைந்துள்ளனர். அதை அடுத்தே மத்திய கிழக்கிற்கான விமான சேவைகளையும், அதன் மேல் பறப்பதையும் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லுஃப்தான்ஸா, எயார் இந்தியா போன்ற சரவதேச விமான நிறுவனங்களும் மத்திய கிழக்கிற்கான சேவைகளை நிறுத்தியுள்ளது. மறு அறிவித்தல் வரை எயார் பிரான்ஸ் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.