இலங்கையில் தேர்தல் பிரசாரத்தில் யுவதி வன்புணர்வு: வேட்பாளர் கைது

4 வைகாசி 2025 ஞாயிறு 13:22 | பார்வைகள் : 178
19 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர்.
வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தே இவ்வாறு வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
வளர்ந்து வரும் அரசியல் கட்சியொன்றிலிருந்து லக்கல பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சனிக்கிழமை (03) பிற்பகல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தின் போது பாலியல் வன்கொடுமை நடந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், 650 சுவரொட்டிகளை வைத்திருந்த இரண்டு உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் பொலிஸ் காவலில் எடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர்.