Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வெப்பநிலை குறித்து வௌியான எச்சரிக்கை

இலங்கையில் வெப்பநிலை குறித்து வௌியான எச்சரிக்கை

4 வைகாசி 2025 ஞாயிறு 12:06 | பார்வைகள் : 8908


 இலங்கையில் வெப்பநிலை குறித்து  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல பகுதிகளில் இன்று வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பத்தின் அளவு, அதாவது மனித உடலால் உணரப்படும் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்