அ.தி.மு.க.,வினருடன் பழகுங்கள்: பா.ஜ.,வினருக்கு நட்டா டிப்ஸ்

4 வைகாசி 2025 ஞாயிறு 10:55 | பார்வைகள் : 139
அ.தி.மு.க.,வினருடன் நெருங்கி பழகி, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உறவை பலப்படுத்துமாறு, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவுரை வழங்கியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம், நேற்று நடந்தது.
கூட்டத்தில் நட்டா பேசியுள்ளதாவது:
தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். தி.மு.க., அரசு, ஊழல், சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்ப, அ.தி.மு.க.,வை பா.ஜ., மிரட்டி கூட்டணியில் சேர்த்து இருப்பதாக பொய் பிரசாரம் செய்கிறது; இதை முறியடிக்க வேண்டும்.
அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் நெருங்கிப் பழகி, இரு கட்சிகளின் கூட்டணி உறவை, நீங்கள் பலப்படுத்த வேண்டும். நட்புறவுடன் பழக வேண்டும்.
தேவையற்ற கருத்துகளை, பா.ஜ.,வினர் பொதுவெளியில் தெரிவிக்க கூடாது.
வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஒருங்கிணைந்து களப் பணியாற்றி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்க வேண்டும்.
மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதிகளவில் பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, சட்டசபைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு நட்டா பேசியுள்ளதாக தெரிகிறது.