பயணச்சீட்டு மாற்றம் மற்றும் பணம் மீளப்பெறுதல் விதிமுறைகள்: SNCF வேலை நிறுத்தம்!
3 வைகாசி 2025 சனி 16:09 | பார்வைகள் : 4763
SNCF நிறுவனம் மே 5 முதல் 11 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளது. சம்பள உயர்வு மற்றும் வேலைநிபந்தனைகள் குறித்த கருத்து வேறுபாடுகளால் தொழிற்சங்கத்தினர் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
குறிப்பாக, மே 8 தேசிய விடுமுறை என்பதால், அதிகமான பயணிகள் இந்த வாரத்தில் பயணிக்க திட்டமிட்டிருப்பதால் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காணிப்பாளர்கள் மற்றும் ஓட்டுனர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
பயணிகள் கவனமாக இருக்க வேண்டியதையும், போக்குவரத்து தடைப்படும் பட்சத்தில் பயணச்சீட்டுகளை இலவசமாக இரத்து செய்யவோ மாற்றிக்கொள்ளவோ முடியும் என்பதை SNCF தெரிவித்துள்ளது.
Ouigo மற்றும் TER பயணச்சீட்டுக்கான நிபந்தனைகள் தனித்தனியாக உள்ளன. பயணத்திற்கு முந்தைய நாள் மாலை 5 மணி முதல் திட்டங்கள் உறுதியாக அறிவிக்கப்படும்.
இதனை இணையதளத்தில் சரிபார்க்கவும், மின்னஞ்சல் அல்லது SMS மூலம் வரும் அறிவிப்புகளைக் கவனிக்கவும் பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan