வன்முறையை தூண்டிய - பெண் TikTok பிரபலம் கைது!!
3 வைகாசி 2025 சனி 15:21 | பார்வைகள் : 6239
TikTok சமூகவலைத்தளமூடாக காவல்துறையினர் மீது வன்முறைக் கருத்துக்களை விதைத்த பெண் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் காவல்துறையினர் மீதும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை அறிந்ததே. இந்த வன்முறை தொடர்பில் 21 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 24 வயதுடைய பெண் ஒருவரும் உள்ளதாகவும், அவர் TikTok பிரபலம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அச்செயலி ஊடாக காவல்துறையினர் மீது துவேச கருத்துக்களை தெரிவித்து வந்ததாகவும், "காவல்துறையினர் அழிக்கப்படவேண்டியவர்கள்" எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் Metz நகரைச் சேர்ந்தவர் எனவும், அவரை 70,000 பேர் பின்தொடர்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பெயரை காவல்துறையினர் வெளியிடவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan