Paristamil Navigation Paristamil advert login

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

3 வைகாசி 2025 சனி 05:34 | பார்வைகள் : 1074


ஈரானிடம்  எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

மேலும், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

ஈரான் எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் அனைத்து கொள்முதல்களும் இப்போதே நிறுத்தப்பட வேண்டும்.

ஈரானில் இருந்து எந்த அளவு எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல்களை வாங்கினாலும், அந்த நாடு அல்லது நபர் உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அவர்கள் அமெரிக்காவுடன் எந்த வகையிலும், வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும்.

இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்