Paristamil Navigation Paristamil advert login

வெற்றுக்கைகளால் - Montparnasse கட்டிடத்தில் ஏறிய ஒருவர் கைது!!

வெற்றுக்கைகளால் - Montparnasse கட்டிடத்தில் ஏறிய ஒருவர் கைது!!

2 வைகாசி 2025 வெள்ளி 20:37 | பார்வைகள் : 986


உயிர்காக்கும் கருவிகளின் உதவியின்றி  Montparnasse கட்டிடத்தில் ஏறிய ஒருவரை பரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று மே 2, வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள குறித்த 59 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் நபர் ஒருவர் ஏறியுள்ளார். எவ்வித உபகரணங்களும் இன்றி ஏறி 210 மீற்றர் உயரம் கொண்ட கட்டிடத்தில் ஏறியுள்ளார். வெற்றிகரமாக அவர் ஏறியதன் பின்னர் 15 ஆம் வட்டார காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் பரிசில் அவ்வப்போது இடம்பெற்று வருகிறது. குறிப்பாக இதே Montparnasse கட்டிடத்தில் 2021 ஆம் ஆண்டு Alexis Landot என்பவர் கட்டிடத்தில் ஏறிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்