அஜித் – ஆதிக் கூட்டணியின் புதிய படம் எப்போது?
2 வைகாசி 2025 வெள்ளி 18:25 | பார்வைகள் : 2981
அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 அன்று குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். அதாவது அஜித்தை ரசிகர்கள் எப்படி எல்லாம் பார்க்க நினைத்தார்களோ அப்படி எல்லாம் காட்டி இருந்தார் ஆதிக். பல வருடங்களுக்குப் பிறகு அஜித்தை மிகவும் ஸ்டைலிஷ் ஆகவும் ஜாலியாகவும் காட்டி இருந்தார். அத்துடன் மரண மாஸான சம்பவங்களையும் செய்திருந்தார் ஆதிக்.
எனவே இந்த படத்தை அஜித் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்த்தனர். அதேசமயம் இந்த படத்தின் கிளைமாக்ஸில் ஏகே 64 படத்தை ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று ஹின்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படம் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் பேச்சு அடிபடுகிறது.
இதற்கிடையில் அஜித்- ஆதிக் கூட்டணியிலான புதிய படத்தை குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப் போகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ஷூட்டிங் 2025 செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறதாம். ஏற்கனவே நடிகர் அஜித் கார் பந்தயத்தில் பிஸியாக இருந்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் வரை அவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பதாக கூறியிருந்தார். ஆனால் தற்போதைய தகவலின்படி அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே படப்பிடிப்பு தொடங்க இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan