சிறைத்தாக்குதலாளிகள் பயங்கரவாதத் தடை நீதிமன்றத்தில்!

2 வைகாசி 2025 வெள்ளி 13:11 | பார்வைகள் : 670
தொடர்சியான சிறைகள் மீதும், சிறையதிகாரிகளின் வீடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று பயங்கரவாதத் குற்றங்கள் மற்றும் குழுவாக இயங்கிய வன்முறைக் குற்றங்கங்கள் ஆகியவற்றிற்காக பயங்கவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் (Junalco) விசாரிக்கப்படுகின்றனர்.
நாடுமுழுவதும் நடாத்தப்பட்ட விசாரணைத் தேடுதலில் 30 பேர் கைது செய்யப்பட்டனரர். இறுதியாக குற்றவாளிகள் 21 பேர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதில் ஏழு பேர் உடனடியாகச் சிறையிலிடப்பட்டுள்ளனர்.
இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பதின்ம வயதினர் மேலதிக விசாரணைகளிற்காக தற்காலிகச் சிறயில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் மீதான விசாரணைகள் தொடர உள்ளன.
இவர்கள் அனைவரும் மார்செய் நகரின் போதைப்பொருட் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.