பாடசாலை கதவுகளில் பாதுகாப்பு கடவை!? - பொதுமக்கள் ஆதரவு!!

2 வைகாசி 2025 வெள்ளி 09:36 | பார்வைகள் : 2954
பாடசாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு கடவை ஒன்றை நிர்மானிக்கும் திட்டம் ஒன்று தொடர்பில் அரசு ஆலோசித்து வருகிறது.
வாசலில் அமைக்கப்பட்ட இந்த பரிசோதனைக் கூடம் ஊடாக உள்ளே பயணிக்கும் போது ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு கடவை அமைப்பது தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பில், 'அவ்வாறான பாதுகாப்பு கடவைகள் அமைப்பது அவசியமா?' என கேள்வி எழுப்பப்பட்டது. அதில் 79% சதவீதமான மக்கள் 'ஆம்' என தெரிவித்துள்ளனர். ஏனைய 21% சதவீதமானவர்கள் 'வேண்டாம்' என தெரிவித்துள்ளனர்.
CNEWS, JDD மற்றும் Europe 1 ஆகிய ஊடகங்களுக்காக CSA நிறுவனம் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்பில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025